டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்..!

லகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் இன்று தொடங்கி, மார்ச் 8 வரை நடைபெறும். முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

 

காலை 11 மணிக்கு கொழும்புவில் தொடங்கும் முதல் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 2009 மற்றும் 2014-ல் இங்கிலாந்தையும், 2022-ல் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து இன்றும் மேஜிக் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில், சிக்ஸர் மன்னர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. கடந்த 2022 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெளியேற்றிய ஸ்காட்லாந்து, இன்றும் அதே அதிரடியைத் தொடரக் காத்திருக்கிறது.

 

இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில், இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் என வலுவான பேட்டிங் வரிசையோடு இந்தியா களம் காணுகிறது.

 

இதற்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் இன்று துவங்குகிற நிலையில் அதனை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு Google Doodle-ஐ கூகுள் வெளியிட்டுள்ளது.