--- --:--:-- --

மாட்டுச் சாணம், சிறுநீரில் இருந்து கேன்சர் மருந்து தயாரிக்க நடந்த ஆய்வில் முறைகேடு

3

மத்தியப் பிரதேசத்தில்) விலங்கியல் பல்கலைக்கழகம் ஒன்றில் பஞ்சகவ்யப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு வந்த நிலையில், விசாரணை குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.

 

அறிக்கையின்படி, 2011 முதல் 2018 வரை மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீர், பாத்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கு சுமார் ரூ.1.92 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தச் செலவு சந்தை விலைப்படி ரூ.15-20 லட்சம் மட்டுமே ஆகும் என்றும் அந்த அறிக்கையில் தகவல் உள்ளது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon