மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி பயன்படுத்துவதாக கண்காணிப்பாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுபடி, நேற்றுமுன்தினம் காவலர்கள் சோதனையிட்டனர். ‘ரிமாண்ட் செல்’ ஒன்றில் கைதி செல்வபாண்டி என்பவர், கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சக தண்டனை கைதிகள் முத்திருள், குமார் ஆகியோர் செல்வபாண்டியிடம் கொடுத்து கழிவறையில் மறைத்து வைக்கச் சொன்னது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு முத்திருள் சென்றபோது அவரிடம் குமார் ரூ.9 ஆயிரம் கொடுத்து அலைபேசி வாங்கிவர செய்துள்ளார்.
நவ.10ல் நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பிய முத்திருள், ஆசன வாயிலில் மறைத்து அலைபேசியை சிறைக்குள் எடுத்து வந்துள்ளார். கைதிகள் மூவர் மீதும் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாரிடமாவது அலைபேசி மூலம் பேசினார்களா என விசாரணை நடக்கிறது.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!
மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!






