டிஜிட்டல் தங்கம் வாங்குகிறீர்களா? செபி எச்சரிக்கை

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. தங்கப் பத்திரங்கள், சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ் டிஜிட்டல் தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.

 

டிஜிட்டல் தங்க முதலீடு செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. கோல்ட் இ.டி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள் பாதுகாப்பானவை. ஆன்லைன் தங்க முதலீட்டில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.