முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்புவின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது குறிப்பில், திரு.வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து தனது உழைப்பால் இரு மகன்களையும் ஆட்சிப் பணியாளர்கள் ஆக்கியவர் என்று புகழ்ந்துள்ளார். பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டி தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




