தவெக பொதுக்குழுவில் 17 முக்கிய தீர்மானங்கள் என்ன?
சென்னையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட உள்ளது. 17 தீர்மானங்களும் பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, உயிரிழந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
அதேபோல் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், அரசாங்க ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்தும், மத்திய அரசு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவெக கையிலெடுத்துள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும் என்றும், சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடைசி தீர்மானமாக கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் என்றும் தவெக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




