அரசியலுக்கு த்ரிஷா வருகிறாரா? தாயார் மறுப்பு
பிரபல நடிகை த்ரிஷா சினிமாவில் நடிப்பதை கைவிட முடிவு செய்திருப்பதாகவும், அவர் அரசியலுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தன. இதுகுறித்து அவர் தாயாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், த்ரிஷா அரசியலுக்கு வர மாட்டார் என்றும், சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு த்ரிஷா வர இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




