ஷோரூம் முன்னால் வைத்து இ-பைக்கை எரித்த நபர்..!
அம்பத்தூரில் தனது மின்சார வாகனத்தை ஷோரூம் முன்னால் வைத்து எரித்த வாடிக்கையாளால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமலைவாயில் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மின்சார வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
பின்னர் அடிக்கடி பழுதான இரு சக்கர வாகனத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தார். இது குறித்து தனியார் விற்பனை மையத்தில் பலமுறை தனது வாகனத்தை கொடுத்தும் வாகனம் தற்பொழுது சரி செய்யப்படாமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி தனது வாகனத்தை ஷோரூம் முன்பாக வைத்து தீ வைத்து எரித்தார். மேலும் தனது நெஞ்சில் அடைத்துக் கொண்டு யாரும் இந்த வாகனத்தை வாங்க வேண்டாம் எனவும் நான் ஏமாந்து விட்டேன் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





