அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி..!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை அமைச்சர் கே என் நேரு கவனித்து வந்தார் அப்போது அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கே.என் நேரு சென்றார்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர் சிகிச்சை முடிந்து விரைவில் அமைச்சர் கே.என் நேரு வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.