சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..புகாரை ஏற்க மறுத்த பெண் ஆய்வாளர்..!
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண் காவல ஆய்வாளர் ஏற்க மறுத்ததாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவருக்கு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக ஜான்சி ராணி கணவனை பிரிந்துள்ள நிலையில் 13 வயதான இவரது மூத்த மகன் தந்தையின் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை அவரது தந்தை ஸ்டீபன் மற்றும் ஸ்டீபனின் அண்ணன் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அடுத்த ஜான்சி மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது பெண் ஆய்வாளர் வரலட்சுமி என்பவர் புகாரை ஏற்க மறுத்ததாகவும் எப்பொழுது கேட்டாலும் ஆய்வாளர் இல்லை என கூறி வருவதாகவும் ஜான்சி ராணி கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
தாங்கள் புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





