தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க முதல் கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.