வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஸ்விக்கி மீது புகார்..!
டெலிவரி தூரத்தை செயற்கையாக உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்காக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகிகுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு ஸ்விக்கிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் குறிப்பிட்ட தூரத்திற்கு டெலிவரி செய்ய இலவசம் என்ற மெம்பர்ஷிப்பை ஸ்விக்கி தான் வாங்கி இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் நவம்பர் 1ம் தேதி தான் வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையே தூது தூரத்தை 9.7 km முதல் 14 கிலோ மீட்டர் தூரம் வரை swiggy இணையதளத்தில் அதிகரித்து காட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தன்னிடம் மூன்று ரூபாய் வசூலித்ததாக குறிப்பிட்டுள்ள சுரேஷ் பாபு google மேக்ஸ் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதனை விசாரித்தாலும் உணவுக்காக பாபு செலுத்திய தொகையை அந்த தேதியில் இருந்து ஒன்பது சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 350.48 ரூபாய் மற்றும் டெலிவரி கட்டணம் ஆக வசூலித்த மூன்று ரூபாயையும் திரும்பி செலுத்த உத்தரவு பெற்றுள்ளது.
மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5000 ரூபாயும் செயற்கையாக தூரத்தை உயர்த்தி காண்பிப்பதற்காக 5000 ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நுகர்வோர் நிதியில் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




