போலி ஹால்மார்க் முத்திரையிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்..!

புதுக்கோட்டையில் நகைக்கடையில் போலி ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் போலி ஹால் மார்க் முத்திரை இட்டு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதன் அடிப்படையில் நேற்று சோதனை நடத்திய அதிகாரிகள் புதுக்கோட்டை சாலையில் உள்ள பாலாஜி ஜூவல்லர்ஸ் நகை கடையில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது போலி முத்திரையிட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இந்திய கால நிர்ணயச் சட்டத்தின் படி போலியான ஹால் மார்க் முத்திரையிட்ட நகைகளை விற்பனை செய்த நகை கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.