--- --:--:-- --

ஆசிட் ஊற்றி பெண் கொலை..வீட்டின் கதவை திறந்த பொழுது அதிர்ச்சி..!

3

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே 65 வயது பெண் ஒருவர் உடல் முழுவதும் ஆசிட் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரையும் மகனையும் இழந்த குமாரி கூலி வேலை செய்தபடி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

 

நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபொழுது முகம் உட்பட பல இடங்களில் ஆசிட் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கிடந்தது தெரியவந்தது.

 

குமாரிக்கு உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon