நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு..!
கேரள மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தார். அந்த நபர் பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு வந்திருந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த தகவலை அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். உயிரிழந்த இருவருடன் தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்து பேருக்கு லேசான காய்ச்சி அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





