ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுப்போம்..!
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதான தாக்குதல் துல்லியமாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் புதிய அதிபராக மசூத் கடந்த மாதம் பதவியேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் ஹமாஸ் படை தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டதாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





