பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் தூக்கில் இடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சரும், மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக விமர்சித்தார். வங்காள தேசத்தில் நிகழ்ந்ததைப் போன்று மேற்கு வங்கத்திலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் நடந்த பன்னிரண்டு மணி நேரத்தில் குற்றத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் ஆணையர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் உடனடியாக தான் பேசியதாகவும் அவர் கூறினார்.
குற்றவாளி தூக்கிட வேண்டும் என பெண்ணின் பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் அந்த விஷயத்தில் தற்பொழுது உறுதியாக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். எந்த ஒரு விசாரணைக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறியவர் முறையான விசாரணையின்றி யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.