--- --:--:-- --

திருப்பூரில் கொண்டத்துவீரபத்திரகாளியம்மனுக்கு ஆடிப்பூரம் விமர்சை..!

12

திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, ஆறு கொம்பு முதல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகொண்டத்துவீரபத்ரகாளி அம்மனுக்கு, கோவில் பூசாரி ரங்கசாமி ஏற்பாட்டில் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை பக்தர்களால் நடத்தப்பட்டது.

 

ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு, நேற்று வளைகாப்பு நாளாகக் கருதி ஸ்ரீகொண்டத்துவீரபத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பெருவிழா நடைபெற்றது.

அதில் திருமணம், குழந்தை வரம் மட்டுமன்றி, குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் ஆடிப்பூர தினத்தில் வேண்டுதல் வைத்து வழிபட்டனர். ஆடி மாதத்தில் வருகின்ற மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம்.

இந்த நாளில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.  சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon