ஐபிஎல் பார்க்கும் பொழுது பேருந்து ஹாரனை அடித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்..!

பேருந்தில் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் ஐபிஎல் மேட்ச் பார்த்து வந்த இளைஞர் ஒருவர் ஓட்டுநர் அடித்த ஹார்னர் சத்தம் இடையூறாக இருப்பதாக கூறி ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை சேப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அமர்ந்து கொண்டு திருவல்லிக்கேணியை சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது இஸ்மாயில் நேற்று நடந்த சென்னை லக்னோ இடையிலான மேட்சினை பார்த்துக்கொண்டு வந்துள்ளார்.

 

மேட்ச் பார்ப்பதில் ஆர்வமாக இருந்த முகமது பேருந்து ஓட்டுனரிடம் ஹாரன் அடிப்பது தொந்தரவாக இருப்பதாகவும் அதனால் ஹாரன் அடிக்காமல் பேருந்து ஓட்டுமாறு கூறியுள்ளார். அதன் பிறகு மிகவும் ஆவேசமாக அவர் அடிக்கவே பேருந்து ஓட்டுனர் முகமதை பின்னிருக்கையில் அவரது மேட்ச் பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

 

ஆனால் அதற்கு முகமது மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் நடத்துனரை கீழ இறங்க வைத்துள்ளனர். ஆத்திரத்தில் அவர் கல்லால் பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.

 

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முகமது இஸ்மாயிலை கைது செய்த நிலையில் எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.