பள்ளிகல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு..!
10ம் வகுப்பு மாணவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 15ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து அந்தந்த பள்ளிகள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





