--- --:--:-- --

இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு..!

9

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உலக நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படுவது மரபு. அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon