ஜேசிபி பக்கெட்டில் விழுந்த பெண்..!

டலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருசக்கர வாகனம் மீது ஜேசிபி இயந்திரம் மோதியதில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். விழுப்புரம் மாவட்டம் சித்தானந்தூரை சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ஆனந்தி பண்ருட்டியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மடப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

தட்டாஞ்சாவடி சாலையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஜேசிபி இயந்திரம் மோதியது. இதில் ஆனந்தி தூக்கி வீசப்பட்ட காயம் அடைந்து ஜேசிபி இயந்திரம் பக்கெட்டில் விழுந்தார். இதனால் காலில் காயமடைந்து வலி தாங்க முடியாமல் துடித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.