--- --:--:-- --

அரை மயக்கத்தில் உடலுறவுக்கு ஓகே சொன்னாலும் அனுமதி அளித்ததாக கருத முடியாது..!

10

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவிற்கு சம்மதித்தாலும் அது சம்பந்தமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் பட்டியலின மாணவியை மாணவர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

அதன் பின்னர் தொடர்ந்து அந்த மாணவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மாணவி சம்மதத்துடனே உறவு கொண்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

 

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து மாணவன் தாக்கல் செய்த மனுவில் கேரள உயர்நீதிமன்றம் மாணவி அரை மயக்கத்தில் இருந்ததால் பாலியல் உறவிற்கு தெரிந்தே அனுமதி அளித்ததாக கருத முடியாது என்று கூறி மாணவனின் மனுவை தள்ளுபடி செய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon