பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்!
சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடி தான் தற்போது அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்து இருக்கின்றனர்.
காதலித்து வந்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடிக்கு இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




