பாம்பின் வாயில் சிக்கிய அணில் குட்டி..!
ரயில்வே மேற்கூறையில் ஆறடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பார்த்து பயத்தில் நடுங்கி பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே பாம்புபிடி வீரரும் பாம்பை மீட்டுள்ளார்.
சுற்றி இருந்த பயணிகள் பாம்பு மீட்க பட்டு விட்டது என நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மறு பக்கம் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு தான் பயணிகளின் மனதை நெகிழ்ச்சி அடைய செய்தது. பாம்பை மீட்ட நபர் அதன் வாயில் மாட்டியிருந்த அணில் குட்டியை உயிருடன் மீட்டுள்ளார்.
விதி முடிந்ததாக கருதிய அனைத்து பயணிகளின் முகத்திலும் புன்னகை தோன்ற வைத்தது. அந்த குட்டி பாம்பிடம் இருந்து தப்பிக்க நீண்ட நேரமாக போராடி உள்ளது. அதற்குள் பாம்பு பிடிவீரர் பாம்பிடம் இருந்து அதை மீட்டுள்ளார்.
தாய் அணில் தன் குட்டி உயிருடன் இருப்பதை பார்த்து நெருங்கி வந்து தன் அன்பைப் பொழிய நினைப்பது பாம்பு பிடி வீரரும் அதை உணர்ந்து குட்டியை தோல் அருகே வைக்கவே தாயிடம் பாச மழையுடன் சுற்றிவரத் தொடங்கியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





