--- --:--:-- --

ரெட் அலர்ட் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

7

ரெட் அலர்ட் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon