--- --:--:-- --

இலங்கையில் இருந்து 4 வயது மகனுடன் அகதியாக வந்த பெண்..!

9

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து நான்கு வயது சிறுவனுடன் ஒரு பெண் அகதியாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

 

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

 

இலங்கையை சேர்ந்த ஒரு பெண் தனது 4 வயது மகனுடன் அகதியாக தனுஷ்கோடி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon