--- --:--:-- --

ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசியதை கண்டித்த கணவன்..!

10

ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசியதை கணவன் கண்டித்ததால் விரக்தியில் மனைவி தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 

இவரின் மனைவி கலைவாணி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கலைவாணியின் செல்போனில் ஆண்களின் தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஏராளமான வீடியோ கால்கள் வந்திருப்பதை அறிந்த சுரேஷ் தன் மனைவியை கண்டித்துள்ளார்.

 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் விரக்தியடைந்த கலைவாணி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon