சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழுநேர ஊரடங்கு..!
டெல்லியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் ஓமிக்ரான் மற்றும் கொரொனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் உடன் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





