6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலமாக வலுப்பெற்று சென்னை, புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுபோல திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






