பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
கோவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணி உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளது. இதுவரை இளம் பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிக்கையில் 64 சாட்சியங்கள் மற்றும் 71 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






