புதிய படத்தில் ஒன்றாக இணையும் சூர்யா, கார்த்தி..!
பிரபல இயக்குனரின் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க2, 24, உறியடி2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






