--- --:--:-- --

சத்துணவு மாணவர்களுக்கு 10 முட்டைகள் , உலர் பொருட்கள் வழங்க உத்தரவு..!

1

அரசு பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சத்துணவு பொருட்களோடு பத்து முட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் இயங்காத நிலையில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

 

இதில் பயன் பெற்று வந்த சுமார் 34 லட்சம் மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களோடு 10 முட்டைகளையும் சேர்த்து வழங்க கடந்தாண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கும் அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களோடு பத்து முட்டைகளை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon