--- --:--:-- --

மதுரையில் இறந்த தனது மகனுக்கு சிலை வைத்த தந்தை..!

9

மதுரை அவனியாபுரத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தவரின் நினைவாக ஆறடி உயர மெழுகு சிலை அவரது தந்தை வைத்துள்ளார். அதிமுக கிழக்கு தொகுதி செயலாளர் முருகேசனின் மகன் மாரி கணேஷ் புல்லட் ரேசராக பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் விருதுகளை வாங்கியுள்ளார்.

 

சிறுநீரக கோளாறு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த நவம்பர் 18-ம் தேதி உயிர் இழந்துள்ளார். முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று 6 லட்ச ரூபாய் செலவில் சிலையை தனது திருமண மண்டபத்தில் முருகேசன் வைத்துள்ளார்.

 

அந்த சிலைக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon