--- --:--:-- --

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..!

7

ஆட்சேபனைக்குரிய சமூக வலைதள பதிவு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

சமூகவலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை வெளியிட்டதால் கங்கனா ரனாவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் துறைக்கு பந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனையடுத்து கங்கணா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்த மும்பை காவல்துறை அவருக்கு இரு முறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. அவர் ஆஜர் ஆகாத நிலையில் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon