தமிழகத்தில் 3-வது நாளாக 2 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு ..! இன்று 1819 பேருக்கு தொற்று உறுதி..! 12 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் 2 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 1819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பும் 12 ஆக குறைந்துள்ளது. இன் 0 மேலும் 2,520 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்தவர்களில் மேலும் 2,520 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இன்னும் 18,441 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7,30,272 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





