--- --:--:-- --

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டக் கோரிக்கை!!

113

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

எஸ்பிபி அவர்களின் மறைவு கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா? எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார்.

 

தேசிய விருதுக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டக் கோரிக்கை

 

இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட என கேயார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon