--- --:--:-- --

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும்..!

2.1

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும் என அந்தக் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய மு க ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

சட்டப்பேரவைக்கு ஒன்பது முறை தேர்வாகி சூப்பர் ஸ்டாராக துரைமுருகன் திகழ்ந்து வருவதாகவும் வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி ஆர் பாலு என்றும் முன்னாள் தலைவர் கருணாநிதி குறிப்பிடுவார் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

 

மேலும் அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon