--- --:--:-- --

மதுரையில் கடைபிடிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம்..!

20

மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இன்று ஒருநாள் தளர்வுகள் அல்லாத முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டது.

 

மதுரை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த 24ம் தேதி முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 73 ஆக இருந்த நிலையில் இன்று புதிதாக 300 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் தளர்வுகள் அல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

பால் விநியோகம், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon