--- --:--:-- --

துணை நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளிய நபர் கைது!

13.1

ஏடிஎம் மோசடி வழக்கில் கைதானவர் பாலியல் தொழிலில் சிக்கியது எப்படி? சந்துருஜி என்பவர் 2018 ஆம் ஆண்டு புதுவை அரசியல் களத்தை அதிர வைத்து ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய புள்ளி. வெளிநாடு, உள்நாடு என ஆயிரக்கணக்கான வங்கி கணக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கில் பணத்தை திருடிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

 

இப்போது துணை நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து சிக்கியுள்ளார். பணத்தாசை மன்னன் கும்பலுடன் சிக்கியது எப்படி? ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் 100 நாட்களுக்கும் மேலாக நடக்கவில்லை. சின்னத்திரை படப்பிடிப்பும் 70 நாட்கள் வரை நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தொடங்க அனுமதிக்கப்பட்ட போதும் அதிகம் பேரை பயன்படுத்தக்கூடாது என்ற கடும் கட்டுப்பாடுகளால் துணை நடிகர், நடிகைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஷூட்டிங்கிற்கு சென்றால் மட்டுமே வருமானம் என உள்ள அவர்கள் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்த போலி ஏடிஎம் கார்டு மன்னன் சந்துரு ஜி ஜாமினில் வெளியே வந்தார். புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டகுப்பம் கடலோரப் பகுதியில் விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

 

கொரோனாவால் சுற்றுலாப்பயணிகள் வராததாலும் விடுதியை திறக்க உள்ள கட்டுப்பாடுகளாலும் விடுதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தனது வியாபாரத்தைப் பெருக்கவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் சந்துரு திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் சூட்டிங் இல்லாமல் ஆறு வறுமையில் வாடிய துணை நடிகைகளை குறிவைத்து தனது வேலைகளை தொடங்கியுள்ளார் .

 

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 துணை நடிகைகளை அணுகியுள்ளார். தனது விடுதியில் பியூட்டிஷியன் மற்றும் மசாஜ் தொழில் நடப்பதாகவும் அதில் பணியாற்ற வருமாறும் கூறியுள்ளார். தாங்கள் துணை நடிகைகள் என்றும், தங்களுக்கு பியூட்டிஷியன் மசாஜ் பற்றி தெரியாது எனவும் கூறியுள்ளனர். அப்போது முறையாக பயிற்சி அளித்து பணி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

 

சூட்டிங் இன்றி வாழ்வாதாரத்தை இழந்த துணை நடிகைகளும் பயிற்சியுடன் வேலை என்பதால் சம்மதித்துள்ளனர். இதையடுத்து கோட்டகுப்பம் விடுதிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் சந்துரு விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கோட்டகுப்பம் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது துணை நடிகைகள் இருவரை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

 

அவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பினர். தொடர்ந்து விடுதியை நடத்தி வந்த சந்துரு அவரது நண்பர் விஜயகுமார் விடுதி காப்பாளர் ஆன டெல்லியை சேர்ந்த ஜோசப் ஆகிய 3 பேரை பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் மூவரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிக்கு கோட்டகுப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் சீல் வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon