காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேள்வி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காவிரி நதிநீர் விவகாரங்களில் தமிழக மக்களுக்கு துரோகங்களை இழைத்துவிட்டு நல்லவன் போல் திமுக வேசம் போடுப்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

காவிரி விவகாரம் தொடர்பாக முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தில் இணைத்தது அதற்கு வலுவூட்ட பலம் சேர்க்க விரைந்து முடிவெடுக்கவே என்ற அடிப்படை ஞானம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஏன் இல்லை என வினவியுள்ளார்.

 

கொரொனா கோர தாண்டவமாடும் பொதுமக்கள் போராட்டம் நடத்துவேன் என ஸ்டாலின் அறிக்கை விடுவது சிறுபிள்ளைத்தனமானது என முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐம்பதாண்டு கால காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்க தவறியது யார் என்றும் 2004 முதல் 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட காவிரி பிரச்சனையை தீர்க்காதது யார் என்ற தமிழக மக்களின் கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொல்ல முடியுமா எனவும் முருகன் வினவியுள்ளார்.


Leave a Reply