தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை! காவலன் செயலியில் புகார்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வேப்பேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து காவலன் செயலியில் வீடியோ மூலம் அவசர அழைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வேலை நிமித்தமாக சென்னை வந்து தங்கியிருந்த மும்பையை சேர்ந்த 27 வயது பெண் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

வீட்டை வாடகைக்கு விட்ட ரேயன் அகர்வால் என்ற நபர்தான் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததால் முள் கரண்டியால் குத்தி கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். ரேயன் அகர்வால் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Leave a Reply