--- --:--:-- --

தமிழ்நாடு சர்வோதய சங்க நூற்போர், நெய்வோருக்கு ரூ. 88 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது

14

கொரோனா வைரசால்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு சர்வோதய சங்க நூற்போர், நெய்வோருக்கு ரூ. 88 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது செயலாளர்  செந்தில்குமரன் முயற்சியால் சாத்தியமானது.

 

திருப்பூர், அவினாசி ரோடு, காந்திநகரில் தமிழ்நாடு மாநில கதர் மற்றும் பாலிவஸ்திரா நூற்போர், நெய்வோர் நலநிதி மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக ஏ.செந்தில்நாதன் உள்ளார். தமிழகம் முழுவதும் 60 சர்வோதய சங்கங்களும் 7 கதர் நிறுவனங்களும் உள்ளன. இதில் 8850 கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் நேரடியாக பணியாற்றி வருகிறார்கள்.

 

தற்போது கொரானா வைரஸ் பரவுதலின் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவர்களின் நலனுக்காக மும்பை கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அனுமதியின் பேரில் தமிழ்நாடு மாநில கதர் மற்றும் பாலிவஸ்திரா நூற்போர், நெய்வோர் நலநிதி மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளையிலிருந்து 8 ஆயிரத்து 850 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.88 லட்சத்து 50 ஆயிரத்தை மேற்படி அறக்கட்டளையின் செயலாளர் ஏ.செந்தில்நாதன் மேற்பார்வையில் இன்று அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon