கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்க ரோபோக்கள் அறிமுகம்
சென்னையில் கொரொனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்காக மூன்று ரோபோக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 பேர் கொரொனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊழியர்களுக்கு கொரொனா தொற்று பரவாமல் இருக்கும் விதமாக நோயாளிகளுக்கு மருந்து, உணவு போன்றவற்றை வினியோகம் செய்ய 10 லட்சம் ரூபாய் செலவில் ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களின் மூலம் நோயாளிகளுக்கு அருகில் செல்லாமல் தள்ளி நின்றபடி உணவு மற்றும் மருந்து வழங்கமுடியும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களின் பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். இதில் 2 ரோபோக்கள் 250 மீட்டர் வரையும் மற்றொரு ரோபோ ஒன்றரை கிலோ மீட்டர் வரையும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.






