கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலதிபரின் வீடு மற்றும் நகை கடையில் 180 சவரன் அதாவது சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மார்த்தாண்டம் அருகே விரிகொடையை சேர்ந்த தொழிலதிபர் பொன் விஜய் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
அவருடைய வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் பின்புறம் வெளியே உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 55 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் பூஜை அறையில் இருந்த விஜய்க்கு சொந்தமான நகை கடையின் சாவியை எடுத்து சென்ற கொள்ளையர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்புறமுள்ள நகைக்கடையை திறந்து 125 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வீடு மற்றும் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை மேற்கொண்டதில் ஒருவர் மட்டும் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு நகையை திருடி சென்றது பதிவாகியிருந்தது. மேலும் மார்த்தாண்டம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை பதிவுகளை கைபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.