இராமநாதபுரத்தில் குடியரசு தின விழா

இராமநாதபுரம் காவலர் கவாத்து மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தார்.

 

வருவாய், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 182 பயனாளிகளுக்கு ரூ. 1.03 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தண்டனையின்றி பணியாற்றிய போலீசார் மற்றும் பல்வேறு ஊழியர்களின் சிறப்பான பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

ராமநாதபுரம் சரக டிஐஜி., ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார்,
கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார் (ஊரக வளர்ச்சி, சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், லயோலா இக்னேஷியஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செல்வக்குமார், கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர் அரசு வாகனங்களை விபத்தின்றி கடந்த 20 ஆண்டுகளாக விபத்தின்றி ஓட்டிய டிரைவர்கள என்.உதயக்குமார் ( கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் ) கே. கணேசன் (ஊரக வளச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், பரமக்குடி) பி.பாஸ்கரன் (ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம், நயினார் கோவில்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.


Leave a Reply