3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவி நேற்று மாலை வெளியே சென்று நிலையில் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தந்தார்கள்.

 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முட்புதர்களுக்கு இடையே மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஆறு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply