தாய், தந்தை, மகன் உட்பட குடும்பத்துடன் மூவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் கீழாம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சந்தானம் பலசரக்கு பொருட்களை விற்கும் ஏஜென்சி எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும், மகன் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

வரும் 27ஆம் தேதி ஆரோக்கிய ஸ்ரீதருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆரோக்கிய ஸ்ரீதர் முதலீடு செய்து இருந்ததாகவும், அதில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

 

பொங்கல் அன்று கடன் கொடுத்தவர்கள் ஆரோக்கிய ஸ்ரீதர் வீட்டிற்கே வந்து தகராறில் ஈடுபட்டதோடு வீட்டு உபயோக பொருட்களையும் எடுத்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

 

இதனால் ஏற்பட்ட அவமானம், மன உளைச்சலிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், ஸ்ரீதர் என்ன மாதிரியான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார், யார் யாரிடம் எவ்வளவு கடன்கள் வாங்கினார், பொங்கலன்று வீட்டிற்கு வந்து தகராறு செய்தவர்கள் யார் என்ற விபரங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply