கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 7 அடி நீளமான நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவிகளில் 90 சதவீதம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் சில மாணவிகளே விடுதியில் உள்ளனர். அப்போது விடுதிக்குள் சுமார் 7 அடி நீளமான நாகப் பாம்பு நுழைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






