டிக்-டாக் மூலம் இளைஞனுடன் ஏற்பட்ட நட்பால் கர்ப்பமான பள்ளி மாணவி

டிக் டாக் மூலம் இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்பமான பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் டிக் டாக்கை தடைசெய்ய வேண்டுமென மாணவியின் பெற்றோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

 

கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய அந்த மாணவிக்கும், பல்லடத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞனுக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் மாணவியை காதல் வலையில் வீழ்த்திய வேல்முருகன் அவரிடம் நெருங்கி பழகியதால் மாணவி 2 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த மாதம் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். வேல்முருகனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் டிக் டாக் செயலியில் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Leave a Reply